மனிதாபிமான நடவடிக்கைகளில் ஓய்வு பெற்றுச் செல்லும் விமானப்படை தளபதியின் பங்களிப்பு அளப்பரியது - பாதுகாப்பு செயலாளர்
நவம்பர் 02, 2020நாட்டில் மூன்று தசாப்த கால நீண்ட பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வருவதில் இலங்கை விமானப்படை பல வெற்றிகரமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸின் பங்களிப்பு அளப்பரியது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
நாட்டில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க எயார் சீப் மார்ஷல் டயஸ் மூலம் வழங்கப்பட்ட சேவைகள் உண்மையிலேயே வியக்கத்தக்கதாக இருந்தன என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தார்.
ஓய்வு பெற்றுச் செல்லும் விமானப் படைத் தளபதிக்கான பாராட்டு விழா பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர், 02) இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர் "மனிதாபிமான நடவடிக்கைகளில் சிரேஷ்ட விமான ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் மனிதபிமான படை நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட களமுனைக்கு முக்கியமாக இருந்த விமானப்படையின் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதில் அவரது தொடர்ச்சியான ஈடுபாடு களமுனையில் செயற்பட்ட அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டது" என தெரிவித்தார்.
ஒரு 'தளபதி' என்ற குணாதிசயத்தின் பண்புகளை விபரித்த பாதுகாப்புச் செயலாளர் , "எயர் சீப் மார்ஷல் டயஸ் தான் விமானப் படைத் தளபதியாக இருந்த காலப்பகுதியில் விமானப்படையை சரியான திசையில் வழி நடாத்திச் சென்ற ஒரு முன்மாதிரியான தளபதிகளில் ஒருவர்" என குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் செயற்பாடுகளின் வெற்றிகரமான நடவடிக்கைகள்
, பாதுகாப்பான தேசம், ஒழுக்கம் மற்றும் சட்டத்தை மதித்து நடக்கும் பிரஜைகளை உருவாக்கும் ஜனாதிபதி செயலணி மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணி குறித்து தகவல் வெளியிட்ட அவர், " இதுவரை நாம் எட்டிய அடைவுகள் குறித்து நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், எதிர்காலத்தில் நாட்டிற்கு எம்மால் அளிக்ககூடிய சிறந்த பங்களிப்புக்களை வழங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்". என குறிப்பிட்டார்.
"நாம் ஒரு குழுவாக பெற்றுக் கொண்ட இந்த அடைவுகளுக்கு பின்னால் ஓய்வு பெறும் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸின் காத்திரமான பங்களிப்பும் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது" என அவர் பாராட்டினார்.
இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னத்தினை ஓய்வு பெற்றுச் செல்லும் விமானப் படைத் தளபதிக்கு பாதுகாப்புச் செயலாளர் வழங்கி வைத்த அதேவேளை, விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவிக்கானி நினைவுச் சின்னத்தினை பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்ன வழங்கி வைத்தார்
இந்த வைபத்தில் வரவேற்புரை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) P.B.S.C நோனிஸினால் நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வில், வெளியுறவுத்துறை செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலக்கேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலக்கேதென்ன, புதிதாக நியமிக்கப்பட்ட விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன, பதில் பொலிஸ் மா அதிபர் சீ டி விக்ரமரத்ன மற்றும் பொலிஸ் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி பிரியங்கி விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி குமுதினி பீரிஸ், கடலோர பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், தேசிய புலனாய்வு பிரிவின் பிரதாணி, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.