இராணுவத்திற்கு டிஜிட்டல் உடல் வெப்பமானிகள்

நவம்பர் 03, 2020

மிரிசவெட்டிய ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி வண. ஈத்தல்வெட்டுனவெவ குணதிலக்க தேரரினால் வன்னி பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவிற்கு10 டிஜிட்டல் உடல் வெப்பமானிகளை பெற்றுக் கொடுக்க அனுசரனை வழங்கினார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள படையினரின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக மேற்கொள்வதற்கு  இந்த உடல் வெப்பமானிகள் திரு. சரத் கலுஆராய்ச்சி எனும் நலன்விரும்பி ஒருவரினால் நன்கொடையாக வழங்கப்பட்டது-

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் செயற்பாடுகளுக்காக குறித்த டிஜிட்டல் உடல் வெப்பமானி வன்னி பாதுகாப்பு படையின் சகல பிரிவுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடமத்திய முன்னோடி பராமரிப்பு பிராந்தியத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால், இருபத்தோராவது பிரிவின் போது கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tamil