கரையொதுங்கிய திமிங்கலங்கள் கடற்படை தலைமையிலான கூட்டு செயல்பாட்டில் மீண்டும் ஆழ்கடலுக்குள்

நவம்பர் 03, 2020

கடலோர பாதுகாப்புப்படை உயிர்காப்பு பிரிவு, பொலீஸ் உயிர்காப்பு பிரிவு, தன்னார்வ உயிர் காப்பாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பாணந்துறை கடற்கரையில் கரையொதுங்கிய  திமிங்கலங்கள் மீண்டும் ஆழ்கடலுக்குள் கொண்டு சேர்க்கும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட கரையொதுங்கிய திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் கொண்டுவிடும் நடவடிக்கையில் கடற்படையின் 30 கடற்படை வீரர்கள், ஒரு ஆழ்கடல் ரோந்து படகு, கடலோர பாதுகாப்பு படையில் 30 உயிர் காப்பாளர்கள், அவர்கள் பயன்படுத்தும் உயிர்காப்பு படகு,  களுத்துறையில் உள்ள கடற்படை துரித கதி நிவாரண மற்றும் மீட்பு பிரிவின் 06 படைவீரர்கள், அவர்கள் பயன்படுத்தும் இரண்டு உயிர்காப்பு படகுகள் ஆகியன ஈடுபடுத்தப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்னவின்  வேண்டுகோளுக்கு அமைய இந்த கடல் வாழ் முலையூட்டிகளை மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்வதற்காக   உள்ளூர் நீர் விளையாட்டு கழகத்தினால் நீர் மோட்டார் இயந்திரமும் பயன்படுத்தப்பட்டன.

குறுகிய- செட்டை கொண்ட திமிங்கில வகை என' அடையாளம் காணப்பட்டுள்ள இந்த திமிங்கலங்கள்  துரதிருஷ்டவசமா அதன் வழித்தடங்களை இழந்ததன் காரணமாகவே இவ்வாறு  கரையொதுங்கியுள்ளன.

உயிரிழந்துள்ள நான்கு திமிங்கிலங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜீவிகள் பாதுகாப்பு திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

நாட்டில் கொரோனா  வைரஸ் பரவலஅதிகரித்துள்ளமை காரணமாக குறித்த கடற்கரைகள் பொதுமக்கள் ஒன்று கூடுவதை பொலிஸார் கட்டுப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.