அட்மிரல் பியால் டி சில்வா பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 03, 2020

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) பியால் டி சில்வா பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவை இன்று (நவம்பர், 03) சந்தித்தார்.

இலங்கை கடற்படையில் 36 வருட காலங்கள் சேவையாற்றி ஜூலை மாதம் 15ஆம் திகதி ஓய்வு பெற்ற அட்மிரல் பியால் டி சில்வா ஆப்கானிஸ்தான், காபூல் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஆப்கானிஸ்தான்  நாட்டுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சினேக பூர்வ கலந்துரையாடலின் போது அட்மிரல் பியால் டி சில்வாவின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைய பாதுகாப்புச் செயலாளர்  தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், இந்த சந்திப்பினை நினைவுகூறும் வகையில் அன்பளிப்பு பொருட்களையும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .