நோயாளிகளுக்கு தபால் மூலம் மருந்துகளைஅனுப்பி வைக்கும் திட்டம் இன்று ஆரம்பம் : சுகாதார அமைச்சு

நவம்பர் 05, 2020

நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் வழக்கமாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்களை இன்று முதல் அமலாகும் வரையில் தபால் மூலம் விநியோகிக்கும் பொறிமுறையை தபால் திணைக்களத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள நோயாளிகள் தங்களது சரியான பெயர், முகவரி, கிளினிக் இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை வழங்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

குறித்த நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ள வைத்தியசாலைகளுக்கு இந்த தகவல்கள் கட்டாயம் தொலைபேசி மூலம் அளிக்கப்பட வேண்டும்.

இதற்கமைய வைத்தியசாலை ஊழியர்கள், அவர்களிடம் வழங்கப்பட்டுள்ள தகவலுக்கு அமைய குறித்த வைத்தியசாலையிலிருந்து மருந்துகள் உள்ளடக்கிய  பொதிகளை நோயாளியின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கமைய, ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள வேளையில் குறித்த மருந்து பொருட்கள் அடங்கிய பொதிகள் தபால் மூலம் குறித்த முகவரிக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

நோயாளிகள் கிராம உத்தியோகத்தர் அல்லது பொது சுகாதார மருத்துவ தாதிகள் மூலமும் தமது சரியான தகவல்களை சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளுக்கு தெரிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil