முல்லைத்தீவு பொது இடங்களை தொற்று நீக்கம் செய்யும் பணிகள் படையினரால் முன்னெடுப்பு

நவம்பர் 05, 2020

முல்லைத்தீவில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பொதுவிடங்களில்  ஆபத்தினை குறைக்கும் வகையில் 64 வது  படைப்பிரிவின் படை வீரர்களினால் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய, 641, 643வது பிரிகேட்களின் படைவீரர்கள், 14வது சிங்க ரெஜிமென்ட் மற்றும் 13வது தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் இந்த தொற்று நீக்கம் செய்யும் பணிகளை முன்னெடுத்தனர். குறித்த பணிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரத்னாயக்க மற்றும் 64வது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் பல்லேவல ஆகியோரின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டது.

ஒட்டுசுட்டான் மற்றும் கச்சியமடு ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட தொற்று நீக்கம் செய்யும் பணிகள்  641வது பிரிகேட்டின் கட்டளைத் தளபதி கேர்ணல் ஜானக் ஜயவர்தனவின் மேற்பார்வையின் கீழ் இடம் பெற்றது.

படையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த  பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் தமது ஆதரவினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Tamil