திரு ரவீநாத ஆரியசின்ஹா பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 06, 2020

அமெரிக்கா வாஷிங்டன் டீசி நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு. ரவிநாத ஆரியசின்ஹா பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்னவை இன்று (நவம்பர், 06) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற  இந்த சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர், திரு. ஆரியசின்ஹாவின்  எதிர்கால நடவடிக்கைகள் சிறப்பானதாகவும் வெற்றிகரமாகவும் அமைய தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

திரு. ஆரியசின்ஹா தற்போதைய பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.