நாராஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தின் நாளாந்த பணிகளை முன்னெடுக்கும் சிவில் பாதுகாப்பு படை

நவம்பர் 08, 2020

மொத்த விற்பனை பொருளாதார மையங்களை மீள திறந்து வைக்கும் செயல்முறைக்கு அமைவாக  பொதுமக்கள் நலன்கருதி நாராஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தின் நாளாந்த பணிகளை மீள ஆரம்பிக்கும் செயற்பாடுகள் சிவில் பாதுகாப்பு படையினரால்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாராஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தின் நாளாந்த பணிகளுக்கு உதவும் வகையில் சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸின் வழிகாட்டலுக்கமைய சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் நாளாந்த பணிகளை முன்னெடுத்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பொருளாதார வர்த்தக நிலையங்கள் அண்மையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.