பாதுகாப்பு செயலாளர் தலாதா மாளிகைக்கு வியஜம் மேற்கொண்டு மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடமாகாநாயக்க தேரர்களை சந்திப்பு

மே 13, 2019

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்கள் தலாதா மாளிகைக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று (மே, 12) கண்டிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். செயலாளர் அவர்கள் தலாதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க தெள பண்டார அவர்களால் வரவேற்கப்பட்டு அங்கு இடம்பெற்ற சமய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

இதனிடையே, செயலாளர் அவர்கள் மல்வத்த பீடத்தின் மாகாநாயக்க திப்பட்டுவவ ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்க வாரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோரை சந்தித்து அவர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டார்.

இதன்போது மாகாநாயக்க தேரர்களால் செயலாளர் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டதுடன், அவர்களின் அறிவுரை ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

ஏப்ரல், 29ஆம் திகதி புதிய பாதுகாப்பு செயலாளராக கடமையேற்ற பின்னர் தலதா மாளிகைக்கு மேற்கொண்ட முதல் விஜயமாகும்.