பிரியா விடை பெறும் இந்திய உதவி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 10, 2020

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து பிரியா விடை பெறும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேர்ணல் ரவி ஷேகர் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்ன இன்று (நவம்பர்,10) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இந்திய பாதுகாப்பு ஆலோசகராக  பதவி வகித்த காலத்தில் முப்படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பிற்கு பாதுகாப்புச் செயலாளர் நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் பிரியா விடை பெறும் இந்தியன் உதவி பாதுகாப்பு ஆலோசகரின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைய பாதுகாப்பு செயலாளர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.