வைரஸ் தொற்று பரவலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது தொடர்பாக இராணுவத்தினரால் விழிப்புணர்வு பிரச்சாரம்

நவம்பர் 10, 2020

ஆனைவிழுந்தான் குளம் பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள்,  கொரோனா வைரஸ் தொற்று பரவலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது தொடர்பாக அறிவுறுத்தும் சுவரொட்டி பிரச்சாரம் திட்டம் இலங்கை இராணுவத்தின் 652வது பிரிகேட்டினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு திட்டமானது  வைரஸ் பரவலின் பாதகமான விளைவுகள் மற்றும் அது பொதுமக்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை விளக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம், அக்கராயன் குளம், ஆனைவிழுநந்தன் குளம், கோனாவில், ஸ்கந்தபுரம் மற்றும் உயிலங்குளம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக இடம் பெற்றது.

இலத்திரனியல் மற்றும் சமூக ஊடக  வலையமைப்புக்கள் என்பன பயன்பாட்டில் இல்லாத பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இலங்கை இராணுவத்தின் 652வது பிரிகேட்டின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் அணில் பெரேராவினால் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை, துண்டுப்பிரசுரங்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசியச் ஏற்பாட்டு மத்திய நிலையத்தினால் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.