31 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
நவம்பர் 11, 2020மடகல்துறை கரையோரப் பிரதேசங்களில் கடற்படையின் வடபிராந்திய கட்டளையாக கடற்படை வீரர்களினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 100 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கடற்படையினரார் சந்தேகத்துக்கிடமான கைவிடப்பட்ட படகு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோதமான கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை இலங்கை கடற்படையினர் ஆரம்பித்த போது கைது செய்யப்படுவதில் இருந்து தடுப்பதற்காகவே இந்த படகினை அவர்கள் கை விட்டு சென்றுள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது நான்கு மூட்டைகளில் பொதி செய்யப்பட்டிருந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் புதுக்குடியிருப்பு மற்றும் எருக்கலம்பிட்டி பகுதிகளில் வடமத்திய கடற்படை கட்டளையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு தேடுதல் நடவடிக்கைகளின் போது 5 கிலோ 907 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் மற்றும் தோட்டவெளி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது நான்கு கிராம் 650 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனமல்வில குடா ஒயாவில் 03 கிலோ மற்றும் 600 கிராம் உள்நாட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபரை கடலோர பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மொணராகல காவல் திணைக்களத்துடன் இணைந்து மற்றுமொரு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அன்மையில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 31 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும்.
இதற்கமைய வட பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 106 கிலோவுக்கும் மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்த ஆறு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் எருக்கலம்பிட்டி தாராபுரம் மற்றும் குடா ஓயாபகுதிகளில் வசிக்கும் 19 தொடக்கம் 56 வயதுக்கு உட்பட்டவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.