28 தனிமைப்படுத்தல் மையங்களில் 2, 277 பேர் தனிமைப்படுத்தலில்

நவம்பர் 11, 2020

படைகளால் மேற்பார்வை செய்யப்படும் 28 தனிமைப்படுத்தல் மையங்களில் மொத்தமாக  2277 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 430 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14,715 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்ட 430 தொழிலாளர்களும் உள் நாட்டைச் சேர்ந்தவர்கள் என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த 64, 263 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11, 237 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 1,041 பேர் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆவர் செயற்பாட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் இதுவரை 619,108 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 8, 272 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அம் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.