சுமார் 2 மில்லியன் பெறுமதியான உயிரியல் பாதுகாப்பு பெட்டகம் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு

நவம்பர் 11, 2020

நாராஹென்பிட்டவில்  அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு சுமார் 2 மில்லியன் ரூபா பெறுமதியான உயிரியல் பாதுகாப்பு பெட்டகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த உயிரியல் பாதுகாப்பு பெட்டகம்,  ஆய்வுகூட சூழல் மற்றும் மாதிரிகள் என்பன நுண்ணுயிர்கள் மற்றும் ஏனைய தாக்கத்தை ஏற்படுத்து காரணிகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு பெட்டகம்  இதனை இயக்கும் இயக்குனர்களுக்கு  மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான வேலை நிலையை வழங்குவதுடன் இவைகள் வைத்தியசாலைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

இராணுவத்தின் பீசிஆர் பரிசோதனைக் கூடத்தில் தற்போது நாளொன்றுக்கு சுமார் 500 பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த அன்பளிப்பு பெளத்தய  தொலைக்காட்சி சேவையுடன் இணைந்து ஸ்ரீ சம்போதி விகாரையின் தாயக்க சபை வழங்கி வைத்தது.

இந்த அன்பளிப்பினை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில்  சம்போதி விகாரையின் பிரதம விகாராதிபதியும் பெளத்தயா தொலைக்காட்சி சேவையின் தலைவருமான வண. பொறலந்தை வஜிரங்க தோரர், தாயக்க சபையின் தலைவர் டொக்டர். ஹர்ஷ அலெஸ், சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கிரிஷாந்த பெனாண்டோ, இராணுவ வைத்தியசாலையில் பராமரிப்பு பணிப்பாளர் பிரிகேடியர் வஜிர காரியவசம், இராணுவப் பேச்சாளரும் இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளருமான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.