விமானப்படடையின் ஆறாவது தொகுதியினர் ஐ.நா.வின் அமைதி காக்கும் பணிகளுக்காக மத்திய ஆபிரிக்க குடியரசு நோக்கி பயணம்

நவம்பர் 11, 2020

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா அமைதிகாக்கும் படையில் கடமை புரிந்து நாடு திரும்ப உள்ள ஹெலிகாப்டர் படையணி வீரர்களுக்கு பதிலாகவே இவர்கள் அங்கு  கடமைக்காக செல்லவுள்ளனர்.

விங் கொமாண்டர் ஜேஎஸ் சமரசேகர தலைமையிலான ஹெலிகொப்டர் படையணி வீரர்களில் 18 விமானப்படை அதிகாரிகள் மற்றும் 92 விமானப்படை வீரர்கள் அடங்களாக 110 பேர் பயணிக்க உள்ளனர்.

ஆறாவது தொகுதி விமானப்படை வீரர்கள்சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மத்திய ஆபிரிக்காவிற்கு புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.