பிராந்திய 'கோவிட் -19' செயல்பாட்டு மையம் மட்டக்களப்பில் நிறுவப்பட்டது

நவம்பர் 11, 2020

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கொவிட் - 19 தொடர்பான எந்தவொரு சவால்களையும் முறியடிக்கும் வகையில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 பிரிவின் இராணுவத்தின் 231வது  பிரிகேட் படையினரால்  மாவட்டத்திற்கான முதல் கொவிட் - 19 செயல்பாட்டு மத்திய நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த மத்திய நிலையம்,  சுகாதார அதிகாரிகள், மாவட்ட செயலாளரின் பிரதிநிதிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், படை வீரர்கள்  மற்றும் துறை சார் நிறுவன அதிகாரிகள்  ஆகியோரினால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த மத்திய நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட்ட செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.