நேற்று 10,207 பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

நவம்பர் 12, 2020

நாட்டில் இதுவரை 629,315 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 10, 207 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 29 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 2,690 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக  என் மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 635 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 15,350ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று அடையாளங் காணப்பட்ட 635 பேரில் 625 பேர் ஒரு நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய 10 பேரும் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த இலங்கையர்கள் எனவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை  11,857 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக பதிவாகியுள்ளது.