முப்படைகளுக்கு முகக் கவசங்கள் அன்பளிப்பு

நவம்பர் 12, 2020

வரையறுக்கப்பட்ட பியூரிட்டாஸ் நிறுவனத்தினால் ஒரு தொகை நடைப்பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் முக கவசம் மற்றும் சாதாரண முக கவசம் என்பன  பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்த இலகுரக, சுவாசிக்கக்கூடிய, ஈரப்பதன் கொண்ட மற்றும் சரிசெய்யக்கூடிய முகக் கவசங்கள்  பொலியஸ்டர் மற்றும் எலாஸ்டேன் ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றன. இந்த முகக் கவசங்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்ணங்கிகள் உள் நுழையாதவறு தடுக்கும் திறன் கொண்ட சர்வதேச தரத்திற்கு அமைய உற்பத்தி செய்யப்படும் இலங்கை தயாரிப்புகள் ஆகும். இந்த முகக் கவசங்கள் மீண்டும் பயன்படுத்த கூடியவையாக காணப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.

கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் உள்ள காலத்தில் முப்படையினரின் நாளாந்த பயிற்சி நடவடிக்கைகளின்போது உடற்பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் முக கவசத்தை பயன்படுத்த முடியும்.

இந்த நன்கொடை நிகழ்வில் வரையறுக்கப்பட்ட பியூரிட்டாஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஈஷான் சமரசிங்க, அக்டிவேட் கார்பன் உற்பத்திகளின் முகாமையாளர் சன்ன விஜேதுங்க மற்றும் பிரதி பொது முகாமையாளர் மனுர விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.