பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பு

மே 12, 2019

ஏப்ரல் 21 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட பெரும்பாலான குற்றவாளிகள், பாதுகாப்பு படையினர், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ஆகியோரினால் கைது செய்யப்பட்டதன் மூலம் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்கள் தெரிவித்தார். மேலும், அனைத்து பாடசாலைகள், மத வழிபாட்டு தளங்கள், சுற்றுலா தளங்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்கள் என்பனவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் படைகளும் பொலிஸாரும் தொடர்ந்து கடமையில் ஈடுபட்டுவருவதாக அவர் தெரிவித்தார். சமூக ஊடகங்கள் வாயிலாக பரவலாக போலியான செய்திகள் பரப்பபடுவதால் அது தொடர்பாக பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.