--> -->

கல்பிட்டியில் 800 கிலோ உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

நவம்பர் 13, 2020

கல்பிட்டி தலுவ கரையோரத்தில்  சட்டவிரோதமாக உலர்ந்த மஞ்சளினை கடத்த முற்பட்ட 6 சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் ஏற்றப்பட்ட 2 படகுகள் இலகு ரக வாகனம் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டன.

சட்டவிரோத கடத்தல்காரர்களினால் கடத்தலுக்கு ஏதுவாக 32 பொதிகளில் போது செய்யப்பட்டிருந்த உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

வடமேல் கடற்படை கட்டளையகத்தினால் முன் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது சந்தேக நபர்களில் நால்வர் கடலில் இருந்து மஞ்சளினை கரைக்கு கொண்டு வந்ததாகவும் அந்த மஞ்சளினை கரையில் இருந்து வாகனத்தில் ஏற்றிச் செல்ல இருவர் காத்திருந்ததாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் கற்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 19 தொடக்கம் 43 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட மஞ்சள், படகு, வாகனம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு பணியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளர்.

Tamil