ஈரான் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
நவம்பர் 13, 2020இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு ஹாசிம் அஷ்ஜஸாதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 13) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவும் இருதரப்பு உறவுகள் இந்த சந்திப்பின் மூலம் மேலும் வலுப்பெறும் என ஈரானிய தூதுவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் ஈரானிய தூதுவர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.