--> -->

இராணுவத்தின் மின்சார இயந்திர மற்றும் பொறியியல் படையணியின் வடிவமைப்பில் யுனிகோல்ட் வாகனங்கள் தயாரிப்பு

நவம்பர் 13, 2020

இலங்கை மின்சார இயந்திர மற்றும் பொறியியல் படையணியினால் (SLEME) புதிதாக வடிவமைக்கப்பட்ட கல்லி எம்ப்டியர், வோட்டர் பவுசர் மற்றும் பலநோக்கு டிரக் வாகனம் என்பன பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த வாகனங்களின் உற்பத்தி காரணமாக நாட்டின் பெருமளவான  அந்நிய செலவாணி மீதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்களின் வடிவமைப்புக்கான வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் என்பன  இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மற்றும் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் துமிந்த சிரிநாக மற்றும் இராணுவத்தில் மின் மற்றும் இலங்கை மின்சார மற்றும் பொறியியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இந்து சமரகோன் ஆகியோரினால் வழங்கப்பட்டன.

9500 கிலோ எடையுள்ள குறித்த புதிய டீசல் கல்லி எம்ப்டியர்  5000 லிட்டர் கொள்ளளவு கொண்டதும் நீர் தாரை குளிரூட்டல், டர்போ மின்னேற்றல், குளிரூட்டப்பட்ட அறைகள், பின்புற நகர்த்தலை கண்காணிக்கும்  கேமரா,  ஜிபிஎஸ் தடம் அறிதல், இயந்திர உயர் வெப்ப சமிஞ்சை உட்பட பல்வேறு நவீன வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த வாகனத்திற்காகும்  செலவு 2.5 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், 8000 லிட்டர் கொள் திறன் மற்றும் பல்லு பல்வேறு நவீன சிறப்பம்சங்களைக் கொண்ட புதிய வோட்டர் பவுசர் ரூ .1.5 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை, ரூ .1.1 மில்லியன் செலவில் குளிரூட்டப்பட்ட அறைகளுடன் கூடிய பல்வேறு தேவைகளுக்காக ஒருங்கே பயன்படுத்தக்கூடிய டிரக் வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள்  இராணுவத்தின் தேவைகளுக்கு ஏற்ப வெளிநாட்டு பணிகளை நோக்கமாகக் கொண்டு எதிர்காலத்தில் இராணுவத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்களால் தயாரிக்கப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Tamil