சேருவாவிலவில் இராணுவத்தினரால் 10 ஏக்கர் நெற்செய்கை

நவம்பர் 14, 2020

கந்தளாய், சேருவாவில பிரதேசத்தில் நீண்ட காலமாக பயிற்செய்கை மேற்கொள்ளப்படவிருந்த 10 ஏக்கர் வயல் காணியில் இராணுவத்தின் 22வது விஜயபாகு காலாட்படை  வீரர்களினால் நெற் செய்கைக்கான விதைநெல் வீசப்பட்டுள்ளது.

சேருவாவில ரஜா மகா விஹாரைக்குச் சொந்தமான 10 ஏக்கர்  தரிசு நிலம் விகாராதிபதியினால் கொடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய 22 பிரிவின் பொது கட்டளை அதிகாரி  மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் பணிப்புரையின் கீழ்   நெல் வயலாக மாற்றப்படுகின்றன.  

இந்தப் பயிர் செய்கை திட்டம் இராணுவத்தளபதியின் ' துரு மிதுரு நவ ரடக்' திட்டத்திற்கு அமைவாகவும் லெப்டினன்ட் கேர்ணல் எஸ். ராமநாயக்கவினால் கட்டளையளிக்கப்பட் விஜயபாகு காலாட்படையின் 22வது பெட்டாலியனினால் தேசத்தை கட்டியெழுப்பும் திட்டத்துக்கு உதவும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சேருவாவில விகாரையின் பிரதம விகாராதிபதி, 22வது பிரிவின் பொது கட்டளைத் தளபதி, 222வது பிரிகேட்டின் கட்டளைத் தளபதி, 22வது விஜயபாகு காலாட் படையின் கட்டளை தளபதி, அதிகாரிகள், படைவீரர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச வாசிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.