கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 11324 ஆக உயர்வு

நவம்பர் 15, 2020

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  11324 பதிவாகியுள்ளதாகவும் வைரஸினால் பாதிக்கப்பட்ட 5206 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 16583 ஆக பதிவாகியுள்ள அதேவேளை   53 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி வைரஸ் தொற்றுக்குள்ளான அவர்களின் எண்ணிக்கை 13084 அதிகரித்துள்ளதாகவும் அவர்களின் 175 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணித்தியாலங்களில் 389 புதிய வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நபர்கள் 30,000 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.