பாணலுவவில் இராணுவத்தினரால் நெற்செய்கை

நவம்பர் 15, 2020

துந்தன பாணலுவ இராணுவ பயிர்ச்செய்கை காணி மற்றும் பணாகொடை இராணுவ முகாம் ஆகிய தெற்கு பாதுகாப்புப் படையினரால் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது.

இராணுவத்தின் 'துரு மிதுரு   நவ ரடக்' திட்டத்துக்கு அமைய மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக்கவின் பணிப்புரை மற்றும் வழிகாட்டுதலுக்கு அமைவாக  மீள மரநடுகை மற்றும் பயிர்ச் செய்கை மேற்கொள்ளல் ஆரம்பிக்கப்பட்டது.

நெற்செய்கையிரிடல் நிகழ்வில் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மையில் சேருவாவில பகுதியில் 10 ஏக்கர் தரிசு நிலம் இராணுவத்தினரால் பயிர் செய்கை  நிலமாக மாற்றப்பட்டு அதில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.