கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,806 ஆக உயர்வு
நவம்பர் 17, 2020கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,806 அதிகரித்துள்ளதாகவும் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின எண்ணிக்கை 17674 ஆக பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 5807 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்தோடு 30,000 மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி வைரஸ் தொற்றுக்குள்ளான அவர்களின் எண்ணிக்கை 13,780 அதிகரித்துள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸ் தொற்றுக்குள்ளான 8,070 பேர் பூரண குணம் அடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்றுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் டோகா -கட்டார், எதியோப்பியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து 99 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் விமான நிலைய நடவடிக்கைகள் நிறைவு பெற்ற பின்னர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 11,130 பிசிஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.