--> -->

கிழக்குப் பிராந்தியத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கண்றுகள் படையினரால் நடுகை

நவம்பர் 18, 2020

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் ஒரே நாளில்  மரக்கன்றுக்கள் நடும் மாபெரும் திட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளில் ஒரே நாளில் 100,000 அரிய வகை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

படையினரால் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை திட்டத்தில்  அரச காணிகளில் நடுகை செய்வதற்காக இலுப்பை, மருது, புளி, வேம்பு,  தேக்கு, மஹோகனி போன்ற அரிய வகை   உள்நாட்டு மரக்கன்றுகள் 100,000 ஐ வனவள திணைக்கள அதிகாரிகள் படையினருக்கு வழங்கியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகேவின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இந்த திட்டத்தில் திருகோணமலை, பூணானி மற்றும் அம்பாறை யில் உய்ய 22,23,24 ஆவது படைப் பிரிவுகள் மற்றும் கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படை ஆகிய படைப் பிரிவுகளைச் சேர்ந்த  படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டத்தில் நடுகை செய்யப்பட்ட மரக்கன்று செல்லும் அந்தந்த பிராந்தியங்களில் உள்ள படைவீரர்களின் பராமரிக்கப்படவுள்ளன .

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரிவுகளின் கட்டளைத் தளபதிகள், பிரிகேடுகளின் கட்டளைத் தளபதிகள், கட்டளைத் தளபதிகள், அதிகாரிகள், சிவில் திணைக்களங்களின் அதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோர் சுகாதார வழி முறைகளுக்கு அமைய கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில்  மர நடுகை செய்யும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மிக விரைவில் முன்னெடுக்கவுள்ளது.

மரக்கன்றுகளை நடுகை செய்யும் மாபெரும் திட்டம் நாட்டின் வனவளத்தினை அதிகரிப்பதற்காகவும்  அழகுபடுத்துவதற்காகவும்  இராணுவத் தளபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட 'துரு மிதுரு நவ ரட்டக்' எனும் திட்டத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டது.