ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இன்று உரை

நவம்பர் 18, 2020

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜனாதிபதி ராஜபக்ஷ பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளதையடுத்து அவர் இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க ருவான்வெளி மகா சேய வளாகத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக  சத்திய பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.