ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை விமானப்படையினரால் விஷேட சமூக சேவைகள் திட்டம் முன்னெடுப்பு

நவம்பர் 18, 2020

தென்சூடான் நகரில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை விமானப்படை வீரர்களினால் அகொபோ நகரிலுள்ள குழந்தைகள் அனாதை இல்லத்தில் விஷேட சமூக சேவைகள் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிவாரண, மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் இந்த திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இதன்போது பாடசாலை உபகரணங்கள், காகிதாதிகள், ஆடை அணிகலன்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டன.   

இலங்கை, 1960 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.