மேலும் சந்தேக நபர்கள் கைது
மே 11, 2019பொலிஸார் காத்தான்குடியில் சந்தேக நபர் ஒருவரை வியாழக்கிழமை (மே, 9) இரவு கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட சஹ்ரான் என்பவருடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்ததுடன், அவருடன் பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளன. மேலும், குறித்த சந்தேகனபார் ஹம்பாந்தோட்டையில் பாதுகாப்பான வீடொன்றில் பயங்கரவாதக் குழுவினால் நடாத்தப்பட்டுவந்த சில பயிற்சி அமர்வுகளில் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர அவர்கள் கொள்ளுப்பிட்டி, பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மாலை (10) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்
இதேவேளை, கொம்பனித்தெரு பொலிசாரினால் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அமைய மருதானையில் உள்ள அவரது காரியாலம் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, ரூபா 8.3 மில்லியன் பணம் மற்றும் 776 கிராம் தங்க நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் தெஹிவளையில் ஆடம்பர வீடொன்றின் விபரங்கள் மற்றும் சில வங்கிக்கணக்குகளும் இதன்போது மீட்கப்பட்டதாக விசாரணையில் இருந்து தெரியாவந்துள்ளது.
மேலும், காத்தான்குடி கடற்கரையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிபொருள் கேச் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மீட்கப்பட்ட இவ்வெடிபொருள் தொகையானது சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாரிகளால் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். பயங்கரவாதக் குழுவினாரால் மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் கண்டரியப்படுவதை உறுதிப்படுத்திய அவர் அவற்றுடன் தொடர்புடைய அனைவரும் கைதுசெய்யப்பட்டு அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.
ஏப்ரல் 21 ம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் இலங்கை வான்பரப்பில் ட்ரோன் கெமரா மற்றும் ஆளில்லாத விமானங்கள் இயக்குதல் தடை செயப்பட்டுள்ளது. இருப்பினும், சந்தேகத்திற்கிடமான ட்ரோன் கெமரா மற்றும் ஆளில்லாத விமானங்களை பல பகுதிகளில் காணப்பட்டதாகவும், இது அவர்களின் பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் அதிகமானவை சிறிய விளையாட்டு ட்ரோன் கெமரா மற்றும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாத பட்டங்களுமாகும். ட்ரோன் கெமரா மற்றும் ஆளில்லாத விமானங்கள் வான்வழியில் இயக்கும் நடவடிக்கைகளானது நாட்டின் சட்டத்தை மீறும் நடவடிக்கையாகும். இவ்வாறு செயற்படுபவர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயட்படுபவர்களாக கருதப்படுவர். ஆகையினால் அவற்றை கைது செய்து இவ்வாறான செயல்களில் ஈடுபடும் தனினபார் அல்லது குழுவினர் தொடர்பாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடக பேச்சாளர் குரூப் கேப்டன் கிஹான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸாரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய விரைந்து செயற்பட்டு, கடற்படையினர் மொரவ்டி ஏரிப்பகுதியில் சில கூர்மையான ஆயுதங்கள், கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று, டேப்லெட் பீசி ஒன்று, கணனி ஒன்று உட்பட தொலை நோக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தலவது ஓயா மாரஸ்ஸன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 365 வெடிபொருட்களும் மூன்று இயந்திர துப்பாக்கிகளுடன் 72 வெற்று ரவைகளும் கைப்பற்று அனைத்து பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.