கடற்படை பொலிஸாருடன் இணைந்து கூட்டு நடவடிக்கையில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டன

நவம்பர் 19, 2020

இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை கட்டளையக வீரர்கள் மன்னார் பொலிஸ் பிரிவுடன் இணைந்து நேற்று  மன்னார், கரிசல் பகுதியில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் 49 கிராம் மற்றும் 490 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள்,  02 கிராம் மற்றும் 440 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டன.

மேலும்,  எருக்குலம்பிட்டியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற நடவடிக்கையின்போது, 02 பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த  01 கிலோ, 941 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கிழக்கு கடற்படை கட்டளையக வீரர்கள் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து திருகோணமலை மற்றும். சர்தாபுர பகுதிகளில் நவம்பர் 10ம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்  போது 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, நவம்பர் 14 அன்று 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை  தெரிவித்துள்ளது.

செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை  தெரிவித்துள்ளது.