பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி

நவம்பர் 20, 2020

ஆக்கம் - டிலான் ஜயதிலக்க

  • சவாலான விடயங்களுக்கு முகம் கொடுத்த ஒரு வருடம் பரிபாலனம்

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன  பாதுகாப்பு செயலாளராக கடமை ஏற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன  2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி பாதுகாப்புச் செயலாளராக தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  மேஜர் ஜெனரல் குணரத்னவிடம் பொதிந்துள்ள நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் காணப்படும்  அதிக அக்கறை, அவரது திறன், தைரியம், அர்ப்பணிப்பு, கரை படியாத தொழில் தர்மம் மற்றும்  உழைப்பு உயரிய பொறுப்புக்கூறும் தன்மை ஆகியவற்றில் உள்ள நம்பகத்தன்மையை காரணமாகவே அவரை பாதுகாப்பு அமைச்சுக்கான  செயலாளராக நியமித்தார்.

தனது 35 வருட கால நீண்ட இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்துதனது சேவைக் காலத்தில்  இராணுவத்தின் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளதுடன்  சிவில் இராணுவ ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்ட மேஜர் ஜெனரல் குணரத்ன, நவம்பர் மாதம் 20 ஆம் திகதி சுபவேளையில் பாதுகாப்புச் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேஜர் ஜெனரல் குணரத்ன, இலங்கை மண்ணில் இருந்து விடுதலைப் புலிகளின் மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை முற்றாக அகற்றுவதற்கு போராடிய ஒரு முக்கிய கஜபா படைப்பிரிவின் போர்வீரராக உள்ளார்.  இவர் கட்டளையிட்ட 53வது படைப் பிரிவு, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்த இயக்கத்தின் சூசை, பொட்டு அம்மன், பானு, தீபன், ஜெயம், லோரன்ஸ், சார்ள்ஸ் அண்டனி, இரட்ணம் மாஸ்டர் உட்பட பல முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்களின் இறுதி முடிவுக்கு காரணமாக அமைந்தது.

மத தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக நடவடிக்கைகள், திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் கப்பம் பெறல் என்பன மலிந்து காணப்பட்ட மிகவும் சவாலான சூழ்நிலையிலேயே அவர் பாதுகாப்புச் செயலாளராக பொறுப்பேற்றார். அப்போது நாட்டின் புலனாய்வுத்துறை மற்றும் முப்படை என்பன நலிவடைந்து காணப்பட்டன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வணக்கஸ்தலங்கள் மற்றும் தொல்பொருள் மரபுரிமை தீவிரவாதிகளினால் அத்துமீற பட்டிருந்தன.

பாதுகாப்பு செயலாளராக தனது தனது முதற் கட்ட நடவடிக்கையாக சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்கும் நடவடிக்கை ஆரம்பித்தார். இதன் மூலம் நாட்டில் கடல் மற்றும் தரை மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஈடுபட்ட போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சட்ட அமலாக்க பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவராக பாதுகாப்புச் செயலாளர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் செயல்படும் ஒரு சிறப்பு செயல்பாட்டு பிரிவு ஜனவரி 12, 2020 அன்று பொலிஸ் விசேட அடிப்படை  தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும், நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு செயலாளரின் பணிப்புரைக்கு அமைய  இந்த சிறப்பு செயல்பாட்டு பிரிவு நிறுவப்பட்டது.

நாட்டிற்கு உள்ளே மற்றும்  நாட்டிற்கு வெளியே செயல்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின்  வலையமைப்பை கண்காணிப்பதற்காக  நாட்டின் புலனாய்வுத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை  மேம்படுத்தும் செயற் திட்டங்களை முன்னெடுத்தமையானது போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அவர் மேற்கொண்ட மற்றும் ஒரு நடவடிக்கையாகும்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டுதலுக்கு அமைய முப்படை, விசேட அதிரடிப்படை, பொலிஸ் ,சுங்க திணைக்களம் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்கள் ஆகியன இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் இந்த ஒரு வருட காலப்பகுதியில் சிறப்பான அடைவுகளை அடைய முடிந்துள்ளது.

நாட்டின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 463 கடல் மைல் தொலைவில்  2020 மார்ச் 28 அன்று கடலில் இதுவரை இல்லாத அளவுக்கு பாரிய போதைப் பொருட்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இதுவே கடலில் கைப்பற்றப்பட்ட அதிகளவான போதைப்பொருட்கள் ஆகும். இதன்போது சுமார் 605 கிலோகிராம் ஐஸ் ரக போதை பொருள், சுமார் 579 கிலோகிராம் கீட்டாமைன் போதை பொருள் என்பன கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து இலங்கை கடற்படையினர்  மார்ச் 05, 2020 அன்று மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது  400 கிலோகிராம் ஹெரோயின் மற்றும்100 கிலோகிராம் ஐஸ் ரக போதை பொருள்  கொண்ட மூன்று வெளிநாட்டு மீன்பிடி படகுகள்  கைப்பற்றப்பட்டன.  இது தவிர, இலங்கை கரையிலிருந்து 548 கடல் மைல் தொலைவில் ஆழ் கடலில் பயணித்த கொடியற்ற கப்பலை கடற்படை கைப்பற்றியது. இக் கப்பலில் இருந்து  சுமார் 260 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 56 கிலோகிராம் ஐஸ் ரக போதை பொருள் என்பன கைப்பற்றப்பட்டன.

மேஜர் ஜெனரல் குணரத்னவினால்  மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு நடவடிக்கை  பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்த முனைந்ததாகும்.  இந்த நடவடிக்கையின் மூலம் பாதாள உலக கோஷ்டிகளினால் செயற்படுத்தப்பட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர நடவடிக்கை எடுத்தார்.

தொடர்ந்து,  சிறைச்சாலைகளிலிருந்து முன்னெடுக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு பாதுகாப்பு செயலாளர் நேரடியாக தலையிட்டு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  இதற்காக அவர் பூச சிறைச்சாலையை மிக உயர் பாதுகாப்புமிக்க சிறைச்சாலையாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை போதைப் பொருள் பாவனையில் இருந்து  விடுவிப்பதற்கான நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்தார். இதற்கமைய, நிட்டம்புவ புனர் வாழ்வு மையத்தில்  1000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கும் வகையில் புதிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் 2000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கும் வகையில் வீரவில பகுதியில் மற்றும் ஒரு கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகமயப்படுத்தப்படவுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல்  காலப்பகுதியில் முதலாவது வைரஸ் தொற்றாளர்  அடையாளம் காணப்பட்டதிலிருந்து  நாட்டு மக்களை வைரஸ் தொற்றிலிருந்து  பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரைக்கு அமைவாக முப்படை வீரர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

அவரது  பணிப்புரைக்கு அமைவாக இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்கள் ஸ்தாபிக்கப்பட்டன, 'இட்டுகம' நிதி திரட்டலுக்காக ஊடக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன,  கொடிய வைரஸுக்கு எதிரான முன்னணி சுகாதார அதிகாரிகளுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டது, சுகாதாரத்துறை மற்றும் பொது சுகாதார பரிசோதனைகளுக்கு உதவும் வகையில் இராணுவ புலனாய்வு வலையமைப்பு தாபிக்கப்பட்டது,
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் நவீன  சுவாச கருவிகள் வழங்கப்பட்டமை, வைரஸ் தாக்கம் காரணமாக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டது என்பன இடம் பெற்றது.

மேஜர் ஜெனரல் குணரத்ன ஜூன் மாதம் 2ஆம் திகதி இரண்டு ஜனாதிபதி செயலணியில் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரக் உரிமைகளை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணி மாற்றம்   ஒழுக்க விழுமியம், நல்லொழுக்கம் மற்றும் சட்டத்தை மதித்து நடக்கும் சமூகம் மூலம் பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி ஆகிய செயல்களின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரக் உரிமைகளை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் என்ற வகையில் பாதுகாப்பு செயலாளர் தீகவபி தூபியின் முதல் கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொண்டார். கிழக்கு மாகாணத்தின் பிற தொல்பொருள் பாரம்பரிய தளங்களில், முஹுது மகா விஹாரை மற்றும் லாகுகலாவில் பாழடைந்த நீலகிரி தூபி ஆகியவற்றை புனர் நிர்மாணம் செய்யும் பணிகளிளையும் முன்னெடுத்தார். மேலும் இந்த புராதன தளங்களின் முதல் கட்டுமான பணிகளுக்கு இவரின் வழிகாட்டுதல்களுக்கு  அமைவாக முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சந்தஹிரு சேய தூபியின் நிர்மாணப் பணிகளிளை கண்காணிப்பதற்காக குறித்த பிரதேசத்திற்கு பல்வேறு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பெற்றுக்கொண்ட  வரலாற்று ரீதியான வெற்றியை தொடர்ந்து மீண்டும் மேஜர் ஜெனரல் குணரத்ன பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

தற்போதைய கடமைகளுக்கு மேலதிகமாக, உள்நாட்டு பாதுகாப்பு, உள்நாட்டுவிவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராகவும்
அவர் பொறுப்பேற்றார்.

இவரின் செயற்பாட்டின் கீழ்  தரமான பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் இயங்கும் தனியார் பாதுகாப்பு சேவைகளை முறைப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன, மேலும் விரைவான நடைமுறையை வகுப்பதன் மூலம் பாதுகாப்பு சேவை வழங்குநர்களின் பதிவு மற்றும் உரிம புதுப்பித்தல் செயல்முறைகளை நெறிப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சம்பவங்களை திறம்பட தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு உடன் முக்கியமான தகவல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கும் முன்மொழியப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டத்தின் உந்துசக்தியாக மேஜர் ஜெனரல் குணரத்ன தனது பங்களிப்பினை வழங்கினார்.

அவர் கடந்த ஆண்டில் இலங்கையில் உள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் தூதர்கள், உயர் ஸ்தானிகர்கள், நாட்டு பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு பணைப்புகள் போன்ற இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார் மற்றும் பிற நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதன் மூலம் ஒரு நல்லுறவை பேணியுள்ளார்.

அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் என்பதற்கு அமைய, அவரது 59 வது பிறந்தநாளை முன்னிட்டு 2020 செப்டம்பர் 6 ஆம் தேதி உண்மையான பாதாள உலக அத்தியாயங்களை அடிப்படையாகக் கொண்ட சிங்கள நாவலான ‘கோதபயா’ மற்றும் ‘பாதாலயோ’ என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார்.

இதுவரை அவர் மிகவும் பிரபலமான ‘ரணமக ஒஸ்ஸே நந்திகடல்’ உட்பட ஏழு புத்தகங்களை எழுதியுள்ளார், பின்னர் ‘நந்திகடலுக்கான பாதை’ என்று ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கப்பட்டது.  மேலும் ‘கடோல் அத்து’, ‘உத்தர தேவி’ மற்றும் ‘கோட்டாபய’ சிங்கள பதிப்பு ஆகியவை இவரின் பெயர் நூல்களாகும்.

அவரது தொலைநோக்கு நடவடிக்கைகளில் எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான தேசத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் பல உள்ளடந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.