'ஹூஸ்ம தென துரு' தேசிய மரநடுகை திட்டம் ஜனாதிபதி ராஜபக்ஷவினால் பத்தரமுல்லையில் அங்குரார்ப்பணம்

நவம்பர் 21, 2020

ஸ்ரீ ஜயவர்தனபுர வில் இராணுவத்தினர் நிர்மாணிக்கப்பட்ட நடைபாதையின் இரு மருங்கிலும் சந்தன மரக்கன்றுகளை நடுகை செய்து  'ஹூஸ்ம தென துரு'  தேசிய மரநடுகை திட்டத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

நாட்டின் வனவளத்தை 30 வீதத்தால் அதிகரிக்கும் ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' திட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய இந்த தேசிய மர நடுகை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்தில் மத்திய சுகாதார அதிகார சபை, சுற்றாடல் அமைச்சு மற்றும் இராணுவத்தினர் இணைந்து நாடு முழுவதும் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடுகை செய்ய உள்ளனர்.

இந்த நிகழ்வில், பாடசாலை சூழலை பசுமை நிறைந்த சூழலாக மாற்றுவதற்காக பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகளை ஜனாதிபதி வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.

சுகாதார வழிகாட்டுதலுக்கமைய இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அணில் ஜாசிங்க, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ச ஷவேந்திர சில்வா, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் திரு சிரிபால அமரசிங்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு ஹேமந்த ஜயசிங்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழலுக்கேற்ற பசுமைத் திட்டத்தின் கீழ் தேசிய காடு வளர்ப்பு மற்றும் அழகுபடுத்தும் திட்டத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து கடந்த டிசம்பர் மாதம் இலங்கை இராணுவம் அங்குரார்ப்பணம் செய்தது.