இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மைய அனர்த்த மீட்பு குழு படைவீரர்களின் செயல் விளக்க காட்சி
நவம்பர் 23, 2020இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மையத்தில் 40 நாட்களைக் கொண்ட அனர்த்த முகாமை மற்றும் மீட்பு பணிகள் தொடர்பான அடிப்படை பாடநெறியினை நிறைவு செய்த படைவீரர்களினால் அனர்த்தங்களின் போதான மீட்பு பணிகள் தொடர்பான செயல் விளக்க காட்சி அளிக்கப்பட்டது.
கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று நடைபெற்ற மீட்பு பணிகள் தொடர்பான செயல் விளக்க காட்சி நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும், இராணுவ தளபதியும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் பெருமளவிலான பர்ர்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
மண்சரிவு,வெள்ள அனர்த்தங்கள் உள்ளிட்டக் இயற்கை அனர்த்தங்களின்போது எவ்வாறு தேடுதல் மற்றும் மீட்பு பணி செயல்பாடுகளைகள் நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக இந்த பயிற்சி நெறியில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மையத்தில் இதுவரை 77 இராணுவ அதிகாரிகள் மற்றும் 1221 படைவீரர்களுக்கு பயிர்ச்சியளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்படை, விமானப்படை, விஷேட அதிரடிப்படை , பொலிஸ், பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
பொதுவான தேடல் மற்றும் மீட்பு பணிகள், நீர் மீட்பு பணிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட மீட்பு பணிகள் மற்றும் செயல்பாட்டு அம்சங்களை பயிற்சி செய்வதற்கும், அனர்த்தங்கள் ஏற்பட்டால் அவற்றை முகாமை செய்வதற்கும் அமைப்புகளை நடத்துவதற்கான ஐ.நா. தரநிலைகள் குறித்த அறிவை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பொது பதவி நிலை பணிப்பாளர் நாயகம், நடவடிக்கை பணிப்பக பணிப்பாளர் நாயகம், பயிற்சி பணிப்பக பணிப்பாளர் நாயகம், மத்திய பாதுகாப்புபடை தலைமையகத்தின் கட்டளை தளபதி, 58 வது படைப்பிரிவின் தளபதி, இராணுவ தலைமையகத்தின் பணிப்பாளர்கள், இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மையத்தின் தளபதி, அதிகாரிகள் மற்றும் ஏனைய படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.