330 கிலோ கிராம் சட்டவிரோத உலர்ந்த மஞ்சள் படையினரால் கைப்பற்றப்பட்டது

நவம்பர் 24, 2020

பேசாலையில் இருந்து  உப்புக்குளம் நோக்கின் பயணித்த வாகனம் ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 330 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை  வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள  இராணுவத்தின் 11வது  பீரங்கி படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய தாராபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள  வீதி தடையில் வைத்து 1.2 மில்லியன் பெறுமதியான மஞ்சள் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட வாகனம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.