கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான 485 பேர் குணமடைவு
நவம்பர் 26, 2020கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 502 போர் புதிதாக அடையாளம் காணப் பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 21,460 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 262 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 90 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 46 பேரும் உள்ளடங்குகின்றனர்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 17, 934 அது அதிகரித்துள்ள அதேவேளை, 12,014 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நாட்டில் 10,400 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாகவும் கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 485 பேர் குணம் அடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கொவிட் - 19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கட்டார் நாட்டிலிருந்து வருகை தந்த 50 பேர் மற்றும் ஓமான் நாட்டிலிருந்து வருகை தந்த 35 பேரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 47 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 4,894 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான கொழும்பு 12 மற்றும் பண்ணிப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96ஆக பதிவாகியுள்ளது.