பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர பதவிப்பிரமாணம்

நவம்பர் 26, 2020

ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரவை அந்தஸ்துள்ள புதிய அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அண்மையில் வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய பொலிஸ்  பயிற்சி கல்லூரி மற்றும் பல்செயற்பாடு அபிவிருத்தி செயலணி ஆகிய நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டன.

இதேவேளை, அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்கள் அரச பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகிய இரு அமைச்சர்கள் கடந்த 20ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.