35வது பொலிஸ் மா அதிபராக சந்தன விக்ரமசிங்க நியமனம்

நவம்பர் 27, 2020

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சந்தன விக்ரமசிங்க 35வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளர். அவர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இன்று பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன, 1986ம் ஆண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகராக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்தார்.

அவர், இலங்கை பொலிஸ் சேவையின் பல்வேறு துறைகளில் 34 வருட காலம் சேவையாற்றியள்ளமை குறிப்பிடத்தக்கது.