தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் ஆரம்பம்

நவம்பர் 28, 2020

இலங்கை, இந்திய மற்றும் மாலைத்தீவுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் சற்று முன் கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பமானது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜீத் டோவால், மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா திதி, குறித்த நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் இடம் பெறும்  இந்த கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், கடலோர பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம், வெளிநாட்டு, பாதுகாப்பு அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.