கடத்தலுக்கு தயாராக இருந்த உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

நவம்பர் 29, 2020

புத்தளம் குதிரை முனை கடற்பரப்பில் சட்டவிரோதமாக உலர்ந்த மஞ்சளினை கடத்த முற்பட்ட ஐந்து இந்திய பிரஜைகள் சந்தேகத்தின் பேரில் கைது கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர்.  அத்துடன் இவர்களிடமிருந்து 1372 கிலோ 300 கிராம் உலர்ந்த மஞ்சளும் கைப்பற்றப்பட்டது.

குதிரைமலை முனையை யொட்டிய இலங்கைக் கடற்பரப்புக்குள் அண்மையில் உள்ள சர்வதேச கடற்பரப்பு எல்லையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இந்திய மீன்பிடி படகு ஒன்றை  அவதானித்த இலங்கை கடற் படையினர் குறித்த பகுதியை நோக்கி விரைந்தனர்.

இதன்போது, குறித்த மீன்பிடிப் படகில் உலர்ந்த மஞ்சளை கொண்ட 39 பொதிகள் ஏற்றப்பட்டு இருந்ததை கண்டுகொண்டதாக  கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த முழு சோதனை நடவடிக்கைகளும் கொவிட் - 19 முன்னெச்சரிக்கைகளுக்கு அமைய  சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.

மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையினர்  உலர்ந்த மஞ்சளினை கைப்பற்றிய கடற்படையினர், கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக மீண்டும் இந்திய கடற்பரப்பிற்குள் அனுப்பி வைத்ததாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.