மஹர சிறைச்சாலையில் நேற்று 2020 நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற பதற்ற நிலைமை தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
நவம்பர் 30, 2020மஹர சிறைச்சாலையில் நேற்று 2020 நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற பதற்ற நிலைமை தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் சில கைதிகள் அமைதியற்ற வகையில் செயற்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தப்பிக்க முயற்சித்தமையினால் அசம்பாவிதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் ஆராயும் பொருட்டு விஷேட விசாரணை நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
மேற்படி சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அதனை கட்டுப்படுத்த ஆரம்பகட்டமாக சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுப்படுத்தப்பட்டனர். என்றாலும் போராட்டம் களவரமாக மாறுவதை அவதானித்ததை அடுத்த அதனை தடுக்க பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் உடனடியாக அழைக்கப்பட்டனர். இங்கு வரவழைக்கப்பட்ட பொலிஸார் உடனடியாக சிறைச்சாலை மற்றும் அதன் வெளிப்புற பாதுகாப்பை உறுதி செய்தனர்.
இதேவேளை, ஆத்திரமடைந்த கைதிகள் சிறைச்சாலையிலுள்ள சுகாதார அலுவலகம் மற்றும் களஞ்சியத்திற்கு தீ வைத்துள்ளனர். இன்று (30) காலை வரை தீ பற்றியதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து சிறைச்சாலையின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியது.