நாட்டில் இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளான 13,594 பேர் குணமடைவு
நவம்பர் 30, 2020கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 496 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 23,483ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட அனைவரும் உள்நாட்டை சேர்ந்தவர்கள் ஆகும். இதற்கமை கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 167 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 56 பேரும் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 53 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று அடையாளம் காணப்பட்ட 553 பேரில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 253 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 65 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேரும் உள்ளடங்குகின்றனர்.
நாட்டில் 13,065 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாகவும் கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 346 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 353 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் ஒருவர் இந்தியாவிலிரிந்து வருகை தந்ததுடன், கட்டார் நாட்டிலிருந்து வருகை தந்த 21 பேர், கொரியாவிலிருந்து வருகை தந்த 275 பேர், ஜப்பான் நாட்டிலிருந்து வருகை தந்த 53 பேரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாட்டில் இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணகை 13,594ஆக அதிகரித்துள்ளது. 6366 பேர் சிகிச்சை பெற்றுவருவதுடன், படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 54 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 5,537 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116ஆக பதிவாகியுள்ளது.