மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து ஒன்றிணைந்த விஷேட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு இன்று (01,டிசம்பர்) பணிப்புரை வழங்கியுள்ளார்.

டிசம்பர் 01, 2020

சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இன்று மீண்டும் மஹா சிறைச்சாலைக்குள் இதேபோன்ற பதற்ற நிலையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய கைதிகளுக்கோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் பொலிஸாரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன். சிறைச்சாலையின் நிர்வாகத்தை சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
டிசம்பர் 29, 2020 அன்று மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து இன்றைய சம்பவம் அறிவிக்கப்பட்டது. (முடிவு).