புதிய பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

டிசம்பர் 02, 2020

புதிய பொலிஸ் மா அதிபர்  சிடி விக்ரமரத்ன பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (டிசம்பர்,02) சந்தித்தார்.

இலங்கை பொலிஸின் 35வது புதிய பொலிஸ் மா அதிபராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பாதுகாப்புச் செயலாளரை சந்திப்பது இதுவே முதற்தடவையாகும்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது பாதுகாப்புச் செயலாளர் புதிய பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவின் எதிர்கால செயற்பாடுகள் சிறப்பாக அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் புதிய பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.