ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்திற்கு கடற்படை ஆய்வுகூட வசதிகளை வழங்குகிறது.

நவம்பர் 18, 2022

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன், கடற்படையின் பல் மருத்துவ சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் பட்டதாரிகளுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அண்மையில் கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் நடைபெற்றது.
 
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட பல் மருத்துவ பீடத்தின் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக கடற்படை மருத்துவமனையில் ஆய்வக மற்றும் மருத்துவ வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
 
இவ்வாறான வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு பெருமளவான பணம் தேவைப்படுவதால் பட்டதாரி மாணவர்களின் நலனுக்காக கடற்படையின் வளங்களை பகிர்ந்து ஒதுக்குமாறு பல் வைத்திய பீட பீடாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
 
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் வைத்திய பீடத்தின் முப்பத்தி இரண்டு (32) பட்டதாரிகள் உட்பட இரண்டு கெடட் உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இந்த அறிமுக நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக கடற்படை மேலும் குறிப்பிட்டுள்ளது.