இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை - வளிமண்டலவியல் திணைக்களம்

நவம்பர் 18, 2022

இந்தியப் பெருங்கடலின் தெற்கு சுமத்ரா பகுதியில் இன்று (நவம்பர் 18) இரவு 7.07 மணியளவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அபாயம் ஏதும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், சம்பந்தப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் இணக்கப்பாட்டுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.