30 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவம் தென்னங்கன்றுகள் நடுகை

டிசம்பர் 07, 2020

'துரு மிதுரு - நவ ரடக்' பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் குட்டிகலையில் உள்ள இராணுவ  முகாம் அமைந்துள்ள  பகுதியில் சுமார்  30 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னங்கன்றுகளை நடுகைசெய்யும்  பணியை இராணுவம் அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.

குட்டிகலவில் உள்ள 1வது  இலங்கை இராணுவ பொதுசேவைப் படையணியின் வீரர்கள்  அதன் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சீ.எஸ்.தெமுனியின் மேற்பார்வையில் கீழ் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றோம் படைவீரர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.