சட்டவிரோத சுறா துடுப்புகளுடன் மீன்பிடி படகு ஒன்றை கரையோர பாதுகாப்பு படையினரால் கைது
நவம்பர் 28, 2022சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட சுறாமீன் துடுப்புகளை வைத்திருந்த பல நாள் மீன்பிடிக் கப்பலும் ஆறு மீனவர்களும் கடந்த சனிக்கிழமை (26) இலங்கை கரையோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீன்பிடி கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் கடமைகளை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள் மீன்பிடிக் கப்பலொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த சட்டவிரோத பாகங்கள் கைப்பற்றப்பட்டதாக கரையோர பாதுகாப்பு படையினரால் தெரிவிக்கப்பட்டனர்.
இதன்படி, மீன்பிடி நடவடிக்கைக்கு சென்று திரும்பிய மீன்பிடி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 38 உலர் சுறா மீன் துடுப்புகள் இவ்வாரு கைது செய்யப்பட்டன.
தற்போதைய விதிமுறைகளின் படி எந்தவொரு சுறா இனத்தின் பாகங்களையும் தக்கவைப்பது, கடத்துவது அல்லது தரையிறக்கம் செய்வது குற்றமாகும்.
கைது செய்யப்பட்ட நபர்களும் பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளது.
Tamil