நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்திதார்
நவம்பர் 29, 2022இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மைக்கல் அப்பிள்டன் இன்று (நவம்பர் 29) பத்தரமுல்லையில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு வருகைதந்த நியூசிலாந்து உயர்ஸ்தானிகரை பாதுகாப்பு செயலாளர் அன்புடன் வரவேற்றார்.
இதையடுத்து, இரு அதிகாரிகளும் சுமுகமாக கலந்துரையாடளை மேற்கொண்டனர்.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.