புதிய இராணுவ பிரதம அதிகாரி நியமிக்கப்பட்டார்

நவம்பர் 30, 2022

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நேற்று (29) பிற்பகல் இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடமிருந்து இராணுவத்தின் 61 வது பிரதம அதிகாரியாக நியமனம் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

மேஜர் ஜெனரல் வீரசூரிய தனது 36 வருட இராணுவ சேவையில் இலங்கை இராணுவத்தில் தொண்டர் படையின் கட்டளைத் தளபதி உட்பட பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார்.

அவர் இலங்கை இலகு காலாட்படை மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை படைப்பிரிவின் தளபதியாகவும் கடமையாற்றுகிறார்.